திருமணமான பெண் அரசு அலுவலர்களுக்கு 12 மாதங்களுக்கு (365 நாட்களுக்கு) மிகாமல் இவிடுப்பு அனுமதிக்கப்படுகிறது. (அரசாணை எண். 84 ம. வ. மே. துறை, 23.08.2021)
01.07.2021 முதல் இவ்வாணை நடைமுறைக்கு வருகிறது.
01.07.2021க்கு முன் மகப்பேறு விடுப்பு
ஆரம்பித்து 01.07.2021ல் மகப்பேறு விடுப்பில் தொடர்ந்து இருப்பவர்களுக்கும் 365 நாட்கள்
பொருந்தும். (கடித
எண் .16049/FRIII/2021, 17.09.21)
01.07.2021க்கு முன் மகப்பேறு விடுப்பு
ஆரம்பித்து 01.07.2021ல் மகப்பேறு முடிந்து தொடர்ச்சியாக மருத்துவ சான்றின் பேரில்
ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பில் (அ) ஊதியமில்லா அசாதாரண விடுப்பில் தொடர்ந்து இருப்பவர்களுக்கும்
365 நாட்கள் பொருந்தும். (கடித
எண் .16049/FRIII/2021, 17.09.21)
உயிருடன் உள்ள இரண்டிற்கும் குறைவான குழந்தைகள்
இருக்கும் வரை மட்டுமே இவ்விடுப்பு வழங்கப்படும். இதில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை
கணக்கில் எடுக்கக் கூடாது. (அரசாணை
எண்.91 ப. நி. சீ. துறை, 28.07.2020)
முதல் மகப்பேறில் இரட்டைக் குழந்தைகள் பிறந்து
உயிருடன் உள்ள நிலையில், இரண்டாவது மகப்பேறுக்கும் இவ்விடுப்பு வழங்கப்படும். (அரசாணை
எண்.367 கல்வி, 08.10.1998)
குழந்தை இறந்து பிறக்கும் நேர்விலும் இவ்விடுப்பு
அனுமதிக்கப்படும்.
மகப்பேறுக்கு முன்னர் முதல் மகப்பேறுக்குப்
பின்னர் வரை பெண் அரசு அலுவலரின் விருப்பப் படி இவ்விடுப்பு வழங்கலாம்.
25.10.2019 முதல் புதியதாக அரசுப் பணியில்,
பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு அவர்கள் அரசுப் பணியிரல் சேரும்முன்
குழந்தை பிறந்த நாள் முதல் அவர்களை அரசுப் பணியிரல் சேர்ந்த நாள் வரை உள்ள காலங்களை
மொத்தமுள்ள மகப்பேறு விடுப்பு நாட்களில் கழித்து மீதமுள்ள நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு
வழங்கலாம். மகப்பேறு விடுப்புக்கான் ஊதியம் மாதம்தோறும் வழங்கலாம்.
(கடித
எண் 2562126 அவி3/2022, 09.06.2022)
மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் ஊழியரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (கடித எண்.22901/93-1 நிர்வாகத் துறை, 18.06.1093)
No comments:
Post a Comment