Saturday, January 14, 2023

        
           9 வருடங்களாக http://smartvas.blogspot.com/ என்ற Blog ல் வெளியிடப்பட்டு பலராலும் பயன்படுத்தப்பட்டது. மற்ற துறை அலுவலர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த Blog லும் வெளியிடப்படுகிறது. இம்மென்பொருளை பயன்படுத்த சில குறிப்புகள்.

1. New Users

1.1. முதல் முறையாக Register செய்ய வழிமுறைகள்

1.1.1. Gmail Account  உள்ளவர்கள்

            Register செய்யத் தேவையில்லை. “G+Login with Google” ஐ Click செய்து அனைத்து அம்சங்களையும் இலவசமாக பார்க்கலாம். திருப்தியிருந்தால் பணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

1.1.2. Gmail Account  இல்லாதவர்கள்

            1. முதலில் Register செய்யவும் : Register செய்யும்போது சரியான Mail IDஐ கொடுக்கவும்,  Mailன்  Passwordஐ கொடுக்காமல் புதிய Passwordல் பதிவு செய்துகொள்ளவும்.

            2. உடன் உங்கள் Mailக்கு மின்னஞ்சல் வரும். அதில் உள்ள Verification Linkஐ Click செய்யவும்.

            3. பிறகு Log In பக்கத்தில் பதிவு செய்த Mail ID மற்றும் Password மூலம் உள்ளே நுழையலாம்.

            4. Log In செய்து அனைத்து வசதிகளையும் இலவசமாக பார்க்கலாம். திருப்தியிருந்தால் பணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

1.2. பணம் செலுத்தும் முறை (Payment Steps)

            Log In செய்து Personel Information Sectionல் உள்ள Name, PAN No., Date of Birth ஆகியவற்றை பூர்த்தி செய்தபின் அங்குள்ள, கீழ்க்கண்ட Linkஐ Click செய்து பணம் (Rs.50/-) செலுத்தலாம்.

 

 

2. Existing Users (Users of FY 2021-22)

             “G+ Login with Google” ஐ Click செய்து Log In செய்யலாம். அல்லது சென்ற ஆண்டு பதிவு செய்த Mail ID மற்றும் Password மூலம் Log In செய்யவும். Personel Information Sectionல் உள்ள Name, PAN No., Date of Birth ஆகியவற்றை சரிபார்க்கவும். பின் அங்குள்ள கீழ்க்கண்ட Linkஐ Click செய்து பணம் (Rs.50/- or Rs.100/-) செலுத்தலாம்.

 

                      Basic Versionல் சென்ற ஆண்டு செய்தது போலவே Home Pageல் விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும்.

Advanced Version –ன் சிறப்பம்சம்

          எவ்வித விவரமும் நீங்கள் பூர்த்தி செய்யாமல், உங்களது பழைய விவரங்களைக் (FY 2021-22) கொண்டே முழு IT Statement for FY 2022-23ம் கணக்கிட்டு கொடுக்கப்படும். வருடா வருடம் மாறக்கூடிய சில விவரங்களை மட்டும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

Website Link https://tisaso.in/sign-in

IT FY 22-23 Mini Guide

Friday, January 6, 2023

NHIS Instruction 26.12.22

 55 புதிய மருத்துவமனைகள், 42 மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் சேர்ப்பு மற்றும் 4 மருத்துவமனைகள் நீக்கம் செய்து அரசாணை

NHIS G.O. 376, 26.12.2022

Monday, December 26, 2022

Maternity Leave

 திருமணமான பெண் அரசு அலுவலர்களுக்கு 12 மாதங்களுக்கு (365 நாட்களுக்கு) மிகாமல் இவிடுப்பு அனுமதிக்கப்படுகிறது. (அரசாணை எண். 84 ம. வ. மே. துறை, 23.08.2021)

          01.07.2021 முதல் இவ்வாணை நடைமுறைக்கு வருகிறது.

01.07.2021க்கு முன் மகப்பேறு விடுப்பு ஆரம்பித்து 01.07.2021ல் மகப்பேறு விடுப்பில் தொடர்ந்து இருப்பவர்களுக்கும் 365 நாட்கள் பொருந்தும். (கடித எண் .16049/FRIII/2021, 17.09.21)

01.07.2021க்கு முன் மகப்பேறு விடுப்பு ஆரம்பித்து 01.07.2021ல் மகப்பேறு முடிந்து தொடர்ச்சியாக மருத்துவ சான்றின் பேரில் ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பில் (அ) ஊதியமில்லா அசாதாரண விடுப்பில் தொடர்ந்து இருப்பவர்களுக்கும் 365 நாட்கள் பொருந்தும். (கடித எண் .16049/FRIII/2021, 17.09.21)

          உயிருடன் உள்ள இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் இருக்கும் வரை மட்டுமே இவ்விடுப்பு வழங்கப்படும். இதில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை கணக்கில் எடுக்கக் கூடாது. (அரசாணை எண்.91 ப. நி. சீ. துறை, 28.07.2020)

          முதல் மகப்பேறில் இரட்டைக் குழந்தைகள் பிறந்து உயிருடன் உள்ள நிலையில், இரண்டாவது மகப்பேறுக்கும் இவ்விடுப்பு வழங்கப்படும். (அரசாணை எண்.367 கல்வி, 08.10.1998)

          குழந்தை இறந்து பிறக்கும் நேர்விலும் இவ்விடுப்பு அனுமதிக்கப்படும்.

          மகப்பேறுக்கு முன்னர் முதல் மகப்பேறுக்குப் பின்னர் வரை பெண் அரசு அலுவலரின் விருப்பப் படி இவ்விடுப்பு வழங்கலாம்.

          25.10.2019 முதல் புதியதாக அரசுப் பணியில், பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு அவர்கள் அரசுப் பணியிரல் சேரும்முன் குழந்தை பிறந்த நாள் முதல் அவர்களை அரசுப் பணியிரல் சேர்ந்த நாள் வரை உள்ள காலங்களை மொத்தமுள்ள மகப்பேறு விடுப்பு நாட்களில் கழித்து மீதமுள்ள நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கலாம். மகப்பேறு விடுப்புக்கான் ஊதியம் மாதம்தோறும் வழங்கலாம்.

(கடித எண் 2562126 அவி3/2022, 09.06.2022)

          மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் ஊழியரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (கடித எண்.22901/93-1 நிர்வாகத் துறை, 18.06.1093)





Saturday, December 24, 2022

Sec 80 DDB Deduction for treatment of specific diseases

 

Eligible Person

For Assessee or any of his dependant

Upto RS.40,000 for less than 60y of age

Upto Rs. 1,00,000 for age above 60 y

Conditions

Only for treatment of following diseases :

1. Neurological disease with >40% disability

        Dementia

        Dystonia Musculorum Deformans

        Motor Neuron Disease

        Ataxia

        Chorea

        Hemiballismus

        Aphasia

        Parkinsons Disease

2. Malignant cancer

3. Chronic Renal Failure

4. Full blown AIDs

5. Blood disorders

Thursday, December 22, 2022

Sec 80 D Medical Insurance and Mediclaim

 

Eligible Person

For Family and Parents




Family

Parents

Senior Parents

A

Medical Insurance Premium

25000

25000

50000

B

Preventive Health Check up

5000

5000

5000

C

Both A and B

25000

25000

50000

D

Medical expenditure Aged above 59

( in case of no insurance for them )

50000


50000


Both C and D or B and D

50000

50000

50000